மன்னரைச் சேர்ந்தொழுகல்
699கொளப்பட்டே மென்றெண்ணிக் கொள்ளாதசெய்யார்
துளக்கற்ற காட்சி யவர்.

ஆட்சியால் நாம் ஏற்றுக் கொள்ளப்பட்டவராயிற்றே  என்ற  துணிவில்,
ஏற்றுக்கொள்ள முடியாத   காரியங்களைத்   தெளிந்த  அறிவுடையவர்கள்
செய்ய மாட்டார்கள்.