குறள் முதற்குறிப்பு அகரவரிசை
குறிப்பறிதல்
706
அடுத்தது காட்டும் பளிங்குபோனெஞ்சங்
கடுத்தது காட்டு முகம்.
கண்ணாடி, தனக்கு எதிரில் உள்ளதைக் காட்டுவதுபோல ஒருவரது
மனத்தில் உள்ளதை அவரது முகம் காட்டி விடும்.