குறிப்பறிதல்
709பகைமையுங் கேண்மையுங்கண்ணுரைக்கும் கண்ணின்
வகைமை யுணர்வார்ப் பெறின்.

பார்வையின்    வேறுபாடுகளைப்    புரிந்துகொள்ளக்   கூடியவர்கள்,
ஒருவரின்  கண்களைப்  பார்த்தே  அவர்   மனத்தில்  இருப்பது  நட்பா,
பகையா என்பதைக் கூறிவிடுவார்கள்.