அவையறிதல்
711அவையறிந் தாராய்ந்து சொல்லுக சொல்லின்
றொகையறிந்த தூய்மை யவர்.

ஒவ்வொரு சொல்லின் தன்மையையும் உணர்ந்துள்ள நல்ல அறிஞர்கள்,
அவையில்  கூடியிருப்போரின்  தன்மையையும்   உணர்ந்து   அதற்கேற்ப
ஆராய்ந்து பேசுவார்கள்.