அவையறிதல்
714ஒளியார்முன் னொள்ளிய ராதல் வெளியார்முன்
வான்சுதை வண்ணங் கொளல்.

அறிவாளிகளுக்கு  முன்னால் அவர்களையொத்த பாலின் தூய்மையுடன்
விளங்கும் அறிஞர்கள், அறிவில்லாதவர்கள்  முன்னால்  வெண்சுண்ணாம்பு
போல் தம்மையும் அறிவற்றவர்களாய்க் காட்டிக் கொள்ள வேண்டும்.