அவையறிதல்
716ஆற்றி னிலைதளர்ந்தற்றே வியன்புல
மேற்றுணர்வார் முன்ன ரிழுக்கு.

அறிவுத்திறனால்  பெருமை  பெற்றோர்   முன்னிலையில்   ஆற்றிடும்
உரையில்  குற்றம் ஏற்படுமானால்,  அது  ஒழுக்க நெறியிலிருந்து தளர்ந்து
வீழ்ந்து விட்டதற்கு ஒப்பானதாகும்.