அவையறிதல்
717கற்றறிந்தார் கல்வி விளங்குங்கசடறச்
சொற்றெரிய வல்லா ரகத்து.

மாசற்ற  சொற்களைத் தேர்ந்தெடுத்து உரை நிகழ்த்துவோரிடமே அவர்
கற்றுத் தேர்ந்த கல்வியின் பெருமை விளங்கும்.