அவையறிதல்
718உணர்வ துடையார்முன்சொல்லல் வளர்வதன்
பாத்தியு ணீர்சொரிந் தற்று.

உணர்ந்து  கொள்ளக்கூடிய  ஆற்றல்  உள்ளவர்களின்  முன்னிலையில்
பேசுதல்,  தானே  வளரக்கூடிய பயிர்  உள்ள  பாத்தியில் நீர் பாய்ச்சுவது
போலப் பயன் விளைக்கும்.