அவையறிதல்
720அங்கணத்து ளுக்க வமிழ்தற்றாற்றங்கணத்தர்
அல்லார்முற் கோட்டி கொளல்.

அறிவுள்ளவர்கள்,    அறிவில்லாதவர்களின்    அவையில்   பேசுவது,
தூய்மையில்லாத முற்றத்தில் சிந்திடும் அமிழ்தம்போல் வீணாகிவிடும்.