அவையஞ்சாமை
721வகையறிந்து வல்லவை வாய்சோரார் சொல்லின்
தொகையறிந்த தூய்மை யவர்.

சொற்களை அளவறிந்து உரைத்திடும் தூயவர்கள் அவையிலிருப்போரின்
வகையறியும்  ஆற்றல்  உடையவராயிருப்பின்   பிழை   நேருமாறு  பேச
மாட்டார்கள்.