அவையஞ்சாமை
726வாளொடென் வன்கண்ணரல்லார்க்கு நூலொடென்
னுண்ணவை யஞ்சு பவர்க்கு.

கோழைகளுக்குக்  கையில்  வாள்  இருந்தும்  பயனில்லை;  அவையில்
பேசிட அஞ்சுவோர் பலநூல் கற்றும் பயனில்லை.