அவையஞ்சாமை
729கல்லா தவரிற்கடையென்ப கற்றறிந்து
நல்லா ரவையஞ்சு வார்.

ஆன்றோர்   நிறைந்த   அவையில்  பேசுவதற்கு  அஞ்சுகின்றவர்கள்,
எத்தனை நூல்களைக் கற்றிருந்த போதிலும், அவர்கள் கல்லாதவர்களைவிட
இழிவானவர்களாகவே கருதப்படுவார்கள்.