நாடு
735பல்குழுவும் பாழ்செய்யு முட்பகையும்வேந்தலைக்குங்
கொல்குறும்பு மில்லது நாடு.

பல குழுக்களாகப் பிரிந்து பாழ்படுத்தும் உட்பகையும் அரசில் ஆதிக்கம்
செலுத்தும்  கொலைகாரர்களால்   விளையும்  பொல்லாங்கும்  இல்லாததே
சிறந்த நாடாகும்.