குறள் முதற்குறிப்பு அகரவரிசை
அன்புடைமை
74
அன்பீனு மார்வ முடமை யதுவீனு
நண்பென்னு நாடாச் சிறப்பு.
அன்பு பிறரிடம் பற்றுள்ளம் கொள்ளச் செய்யும். அந்த உள்ளம், நட்பு
எனும் பெருஞ்சிறப்பை உருவாக்கும்.