அரண்
744சிறுகாப்பிற் பேரிடத்த தாகியுறுபகை
யூக்க மழிப்ப தரண்.

உட்பகுதி பரந்த இடமாக  அமைந்து, பாதுகாக்கப்  படவேண்டிய பகுதி
சிறிய இடமாக  அமைந்து,  கடும் பகையின் ஆற்றலை அழிக்கக் கூடியதே
அரண் எனப்படும்.