பொருள் செயல்வகை
751பொருளல் லவரைப் பொருளாகச்செய்யும்
பொருளல்ல தில்லை பொருள்.

மதிக்கத்  தகாதவர்களையும்  மதிக்கக்கூடிய அளவுக்கு உயர்த்திவிடுவது
அவர்களிடம் குவிந்துள்ள பணத்தைத் தவிர வேறு எதுவும் இல்லை.