நட்பு
787அழிவி னவைநீக்கி யாறுய்த் தழிவின்க
ணல்லல் உழப்பதா நட்பு.

நண்பனைத்   தீயவழி  சென்று  கெட்டுவிடாமல்  தடுத்து,   அவனை
நல்வழியில்  நடக்கச்  செய்து, அவனுக்குத்  தீங்கு வருங்காலத்தில் அந்தத்
தீங்கின் துன்பத்தைப் பகிர்ந்து கொள்வதே உண்மையான நட்பாகும்.