நட்பு
790இனைய ரிவர்நமக் கின்னம்யா மென்று
புனையினும் புல்லென்று நட்பு.

நண்பர்கள்  ஒருவருக்கொருவர்  "இவர்  எமக்கு இத்தன்மையுடையவர்;
யாம்  இவருக்கு இத்தன்மையுடையோம்"  என்று  செயற்கையாகப் புகழ்ந்து
பேசினாலும் அந்த நட்பின் பெருமை குன்றிவிடும்.