நட்பாராய்தல்
794குடிப்பிறந்து தன்கட் பழிநாணு வானைக்
கொடுத்துங் கொளல்வேண்டு நட்பு.

பழிவந்து  சேரக்  கூடாது   என்ற   அச்ச   உணர்வுடன்   நடக்கும்
பண்பார்ந்த  குடியில்  பிறந்தவருடைய   நட்பை   எந்த   வகையிலாவது
பெற்றிருப்பது பெரும் சிறப்புக் குரியதாகும்.