நட்பாராய்தல்
799கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை யடுங்காலை
யுள்ளினு முள்ளஞ் சுடும்.

ஒருவர்  கொலைக்கு  ஆளாகும் போது  கூட,  தனக்குக்  கேடு வந்த
நேரம்  கைவிட்டு  ஒதுங்கி  ஓடிவிட்ட  நண்பர்களை  நினைத்து விட்டால்
அந்த நினைப்பு அவரது நெஞ்சத்தைச் சுட்டுப் பொசுக்கும்.