அன்புடைமை
80அன்பின் வழிய துயிர்நிலை யஃதிலார்க்
கென்புதோல் போர்த்த வுடம்பு.

அன்புநெஞ்சத்தின்   வழியில்   இயங்குவதே   உயிருள்ள உடலாகும்;
இல்லையேல், அது எலும்பைத் தோல் போர்த்திய வெறும் உடலேயாகும்.