விருந்தோம்பல்
81இருந்தோம்பி யில்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு.

இல்லறத்தைப் போற்றி வாழ்வது,  விருந்தினரை  வரவேற்று,  அவர்க்கு
வேண்டிய உதவிகளைச் செய்வதற்காகவே.