பழைமை
810விழையார் விழையப் படுவர் பழையார்கட்
பண்பின் றலைப்பிரியா தார்.

பழமையான  நண்பர்கள்  தவறு  செய்த   போதிலும்,   அவர்களிடம்
தமக்குள்ள  அன்பை  நீக்கிக்  கொள்ளாதவர்களைப் பகைவரும் விரும்பிப்
பாராட்டுவார்கள்.