தீநட்பு
813உறுவது சீர்தூக்கு நட்பும் பெறுவது
கொள்வாருங் கள்வரு நேர்.

பயனை   எண்ணிப்பார்த்து   அதற்காகவே   நட்புக்   கொள்பவரும்,
விலைமகளிரும், கள்வரும் ஆகிய இந்த மூவரும், ஓரே மாதிரியானவர்களே
ஆவார்கள்.