தீநட்பு
817நகைவகைய ராகிய நட்பிற் பகைவரால்
பத்தடுத்த கோடி யுறும்.

சிரித்துப்  பேசி  நடிப்பவர்களின்  நட்பைக் காட்டிலும், பகைவர்களால்
ஏற்படும் துன்பம் பத்துக்கோடி மடங்கு நன்மையானது என்று கருதப்படும்.