கூடாநட்பு
822இனம்போன் றினமல்லார் கேண்மை மகளிர்
மனம்போல வேறு படும்.

உற்றாராக   இல்லாமல்   உற்றார்   போல   நடிப்பவர்களின்   நட்பு,
மகளிருக்குரிய நற்பண்பு  இல்லாமல்  அப்பண்பு உள்ளவர் போல நடிக்கும்
விலை மகளிரின் மனம்போல உள்ளொன்றும் புறமொன்றுமாக இருக்கும்.