பேதைமை
833நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும்
பேணாமை பேதை தொழில்.

வெட்கப்பட  வேண்டியதற்கு  வெட்கப்படாமலும்,  தேடவேண்டியதைத்
தேடிப் பெறாமலும், அன்புகாட்ட வேண்டியவரிடத்தில் அன்பு காட்டாமலும்,
பேணிப்  பாதுகாக்கப்பட  வேண்டியவற்றைப்  பாதுகாக்காமலும்  இருப்பது
பேதைகளின் இயல்பாகும்.