புல்லறிவாண்மை
842அறிவிலா னெஞ்சுவந் தீதல் பிறிதுயாதும்
இல்லை பெறுவான் றவம்.

அறிவில்லாத ஒருவன் வள்ளலைப்போல ஒரு பொருளை மகிழ்ச்சியுடன்
வழங்குவதற்குக்  காரணம்  வேறொன்றுமில்லை;   அது   அப்பொருளைப்
பெறுகிறவன் பெற்றபேறு என்றுதான் கருத வேண்டும்.