விருந்தோம்பல்
85வித்து மிடல்வேண்டுங் கொல்லோ விருந்தோம்பி
மிச்சின் மிசைவான் புலம்.

விருந்தினர்க்கு  முதலில்   உணவளித்து   மிஞ்சியதை உண்டு வாழும்
பண்பாளன்,   தன்  நிலத்திற்குரிய  விதையைக்கூட  விருந்தோம்பலுக்குப்
பயன்படுத்தாமல் இருப்பானா?