குறள் முதற்குறிப்பு அகரவரிசை
இகல்
857
மிகல்மேவும் மெய்ப்பொருள் காணார் இகல்மேவும்
இன்னா அறிவி னவர்.
பகை உணர்வு கொள்ளும் தீய அறிவுடையவர்கள் வெற்றிக்கு
வழிகாட்டும் உண்மைப் பொருளை அறியமாட்டார்கள்.