இகல்
859இகல்காணா னாக்கம் வருங்கா லதனை
மிகல்காணுங் கேடு தரற்கு.

ஒருவன்  தனக்கு  நன்மை  வரும்போது மாறுபாட்டை நினைக்காமலே
இருப்பான். ஆனால் தனக்குத்  தானே  கேடு  தேடிக்  கொள்வதென்றால்
அந்த மாறுபாட்டைப் பெரிதுபடுத்திக் கொள்வான்.