பகைமாட்சி
863அஞ்சு மறியா னமைவில னீகலான்
தஞ்ச மெளியன் பகைக்கு.

அச்சமும்,  மடமையும் உடையவனாகவும், இணைந்து வாழும் இயல்பும்,
இரக்க   சிந்தையும்   இல்லாதவனாகவும்   ஒருவன்  இருந்தால்,  அவன்
பகைவரால் எளிதில் வெல்லப்படுவான்.