பகைத்திறந் தெரிதல்
874பகைநட்பாக் கொண்டொழுகும் பண்புடை யாளன்
தகைமைக்கட் டங்கு முலகு.

பகைவர்களையும் நண்பர்களாகக் கருதிப் பழகுகின்ற பெருந்தன்மையான
பண்பை இந்த உலகமே போற்றிப் புகழும்.