பகைத்திறந் தெரிதல்
875தன்றுணை யின்றாற் பகையிரண்டால் தானொருவ
னின்றுணையாக் கொள்கவற்றி னொன்று.

தனது  பகைவர்கள்  இரு  பிரிவினராக  இயங்கும் நிலையில் தனக்குத்
துணையாக  யாருமின்றித்  தனியாக  இருப்பவர்,  அந்தப்  பகைவர்களில்
ஒருவரைத் துணையாகக் கொள்ள வேண்டும்.