உட்பகை
883உட்பகை யஞ்சித்தற் காக்க வுலைவிடத்து
மட்பகையின் மாணத் தெறும்.

உட்பகைக்கு  அஞ்சி  ஒருவன்   தன்னைப்   பாதுகாத்துக்   கொள்ள
வேண்டும்.  இல்லாவிட்டால்   ஒரு  சோதனையான   நேரத்தில்   பச்சை
மண்பாண்டத்தை  அறுக்கும்   கருவிபோல   அந்த  உட்பகை    அழிவு
செய்துவிடும்.