உட்பகை
887செப்பின் புணர்ச்சிபோற் கூடினுங் கூடாதே
யுட்பகை யுற்ற குடி.

செப்பு  எனப்படும்  சிமிழில்  அதன்  மூடி  பொருந்தியிருப்பது போல
வெளித்தோற்றத்துக்கு மட்டுமே தெரியும். அவ்வாறே உட்பகையுள்ளவர்கள்
உளமாரப் பொருந்தியிருக்க மாட்டார்கள்.