விருந்தோம்பல்
89உடமையு ளின்மை விருந்தோம்ப லோம்பா
மடமை மடவார்க ணுண்டு.

விருந்தினரை    வரவேற்றுப்  போற்றத்  தெரியாத   அறிவற்றவர்கள்
எவ்வளவு     பணம்      படைத்தவர்களாக   இருந்தாலும்   தரித்திரம்
பிடித்தவர்களாகவே கருதப்படுவார்கள்.