பெரியாரைப் பிழையாமை
893கெடல்வேண்டிற் கேளாது செய்க அடல்வேண்டி
னாற்றுப வர்க ணிழுக்கு.

ஒருவன்,  தன்னைத்தானே  கெடுத்துக் கொள்ள விரும்பினால் பகையை
நினைத்த  மாத்திரத்தில்  அழிக்கக்  கூடிய   ஆற்றலுடையவர்களை  யார்
பேச்சையும் கேட்காமலே இழித்துப் பேசலாம்.