வரைவின் மகளிர்
911அன்பின் விழையார் பொருள்விழையு மாய்தொடியா
ரின்சொ லிழுக்கந் தரும்.

அன்பே இல்லாமல் பொருள் திரட்டுவதையே குறிக்கோளாகக் கொண்ட
பொதுமகளிர்   இனிமையாகப்   பேசுவதை   நம்பி  ஏமாறுகிறவர்களுக்கு
இறுதியில் துன்பமே வந்து சேரும்.