குறள் முதற்குறிப்பு அகரவரிசை
வரைவின் மகளிர்
912
பயன்றூக்கிப் பண்புரைக்கும் பண்பில் மகளிர்
நயன்றூக்கி நள்ளா விடல்.
ஆதாயத்தைக் கணக்கிட்டு அதற்கேற்றவாறு பாகு மொழிபேசும்
பொதுமகளிர் உறவை ஒருபோதும் நம்பி ஏமாறக்கூடாது.