கள்ளுண்ணாமை
929களித்தானைக் காரணங் காட்டுதல் கீழ்நீர்க்
குளித்தானைத் தீத்துரீஇ யற்று.

குடிபோதைக்கு   அடிமையாகி   விட்டவனைத்   திருத்த   அறிவுரை
கூறுவதும்,   தண்ணீருக்குள்   மூழ்கிவிட்டவனைத்   தேடிக்கண்டுபிடிக்கத்
தீப்பந்தம் கொளுத்திக் கொண்டு செல்வதும் ஒன்றுதான்.