சூது
931வேண்டற்க வென்றிடினுஞ் சூதினை வென்றதூஉம்
தூண்டிற்பொன் மீன்விழுங்கி யற்று.

வெற்றியே  பெறுவதாயினும்  சூதாடும்  இடத்தை  நாடக்கூடாது. அந்த
வெற்றி,  தூண்டிலின்  இரும்பு  முள்ளில்   கோத்த   இரையை   மட்டும்
விழுங்குவதாக   நினைத்து   மீன்கள்   இரும்பு   முள்ளையே  கௌவிக்
கொண்டது போலாகிவிடும்.