சூது
934சிறுமை பலசெய்து சீரழிக்குஞ் சூதின்
வறுமை தருவதொன் றில்.

பல   துன்பங்களுக்கு  ஆளாக்கி,  புகழைக்  கெடுத்து,  வறுமையிலும்
ஆழ்த்துவதற்குச் சூதாட்டத்தைப் போன்ற தீமையான செயல் வேறொன்றும்
இல்லை.