சூது
937பழகிய செல்வமும் பண்புங் கெடுக்குங்
கழகத்துக் காலை புகின்.

சூதாடும்  இடத்திலேயே  ஒருவர் தமது காலத்தைக் கழிப்பாரேயானால்,
அது    அவருடைய    மூதாதையர்   தேடிவைத்த    சொத்துக்களையும்
நற்பண்பையும் நாசமாக்கிவிடும்.