குடி
954அடுக்கிய கோடி பெறினுங் குடிப்பிறந்தார்
குன்றுவ செய்த லிலர்.

பலகோடிப்  பொருள்களை  அடுக்கிக்  கொடுத்தாலும்  சிறந்த குடியில்
பிறந்தவர்கள்  அந்தச்  சிறப்புக்  கெடுவதற்கான   செயல்களுக்கு   இடம்
தரமாட்டார்கள்.