குடி
957குடிப்பிறந்தார் கண்விளங்குங் குற்றம் விசும்பின்
மதிக்கண் மறுப்போ லுயர்ந்து.

பிறந்த  குடிக்குப் பெருமை சேர்ப்பவரிடமுள்ள சிறிய குறைகள், ஒளிவு
மறைவு     ஏதுமின்றி,    வானத்து    நிலவில்   உள்ள    குறைபோல
வெளிப்படையாகத் தெரியக் கூடியதாகும்.