குறள் முதற்குறிப்பு அகரவரிசை
பெருமை
976
சிறியா ருணர்ச்சியு ளில்லை பெரியாரைப்
பேணிக்கொள் வேமென்னு நோக்கு.
பெரியோரைப் போற்றி ஏற்றுக்கொள்ளும் நோக்கம், அறிவிற்
சிறியோரின் உணர்ச்சியில் ஒன்றியிருப்பதில்லை.