சான்றாண்மை
987இன்னாசெய் தார்க்கு மினியவே செய்யாக்கா
லென்ன பயத்ததோ சால்பு.

தமக்குத்   தீமை   செய்தவருக்கும்   திரும்ப   நன்மை   செய்யாமல்
விட்டுவிட்டால்  சான்றாண்மை  எனும்  நல்ல  பண்பு இருந்தும் அதனால்
என்ன பயன்?