பண்புடைமை
993உறுப்பொத்தல் மக்களொப் பன்றால் வெறுத்தக்க
பண்பொத்த லொப்பதா மொப்பு.

நற்பண்பு  இல்லாதவர்களை  அவர்களின் உடல் உறுப்புகளை மட்டுமே
ஒப்பிட்டுப்  பார்த்து  மக்கள்  இனத்தில்  சேர்த்துப்  பேசுவது  சரியல்ல:
நற்பண்புகளால் ஒத்திருப்பவர்களே மக்கள் எனப்படுவர்.