தொடக்கம்
திரிகடுகம்
(நல்லாதனார்)
கடவுள் வாழ்த்து
கண் அகல் ஞாலம் அளந்ததூஉம், காமரு சீர்த்
தண் நறும் பூங் குருந்தம் சாய்த்ததூஉம், நண்ணிய
மாயச் சகடம் உதைத்ததூஉம்,-இம் மூன்றும்
பூவைப் பூ வண்ணன் அடி.
உரை